கோயம்பேடு சந்தை அருகில் ரோகிணி திரையரங்கம் ஒன்று இயங்கிவருகிறது. அந்த திரையரங்கில் கோயம்பேடு சந்தையில் பணிபுரியும் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு பொழுதுப்போக்குக்காக அருகாமையில் இருக்கும் அத்திரையரங்கிற்கு அன்றாடம் வந்து செல்வதுண்டு.
இவர்களால், குடும்பத்தோடு வந்து படம் பார்ப்போருக்கு சிறு அசௌகரியம் ஏற்படக்கூடும் என்பதால் திரையரங்கம் சார்பில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது அதில், 'மது அருந்தியவர்கள் மற்றும் லுங்கி அணிந்தவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது; மீறினால் டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படாது' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த திடீர் அறிவிப்பால் கூலித் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.