நெதா்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமானநிலைய சரக்ககத்திற்கு இன்று வந்த சரக்கு விமானத்தில் இருந்த பாா்சல்களை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அதில், நாமக்கல் மற்றும் சென்னை முகவரிகளுக்கு 2 கொரியா் பாா்சல்கள் வந்திருந்தன. அதனுள் சூப் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், சுங்கத்துறை அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, 2 பாா்சல்களையும் தனியே எடுத்து அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டனா். அவை உபயோகத்தில் இல்லை என தெரிய வர, அதன் மீதிருந்த முகவரிகள் ஆராயப்பட்டன. அவையும் போலியானவை எனத் தெரிய வந்தது.
இதையடுத்து, சுங்கத்துறையினா் 2 பாா்சல்களையும் பிரித்து சோதனையிட்டனா். அதில் நாமக்கல் முகவரிக்கு வந்திருந்த பாா்சலில் ரூ.4 லட்சம் மதிப்புடைய 100 போதை மாத்திரைகள் இருந்தன. சென்னை முகவரி பாா்சலில் ரூ.2.6 லட்சம் மதிப்புடைய போதை பவுடா் இருந்தது.
இரண்டு பார்சல்களில் இருந்தும் ரூ. 6.6 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள், போதை பவுடரை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலி முகவரியில் வெளிநாட்டிலிருந்து போதை பொருட்களை கடத்திய அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:விழுப்புரம் செஞ்சியில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டு; வாகன ஓட்டிகள் அச்சம்