ETV Bharat / state

கொசுவை ஒழிப்பதற்கு ட்ரோன் இயந்திரம்: மாநகராட்சி நடவடிக்கை

author img

By

Published : Jul 1, 2021, 5:19 PM IST

கொசுவை ஒழிப்பதற்காக மூன்று ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு, நாளொன்றுக்கு மூன்று மண்டலங்களில் மருந்து தெளிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநகராட்சி
மாநகராட்சி

சென்னை: பெருநகர சென்னையில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணிகளை மாநகராட்சி இப்போதே தொடங்கிவிட்டது.

கொசுக்கள் கால்வாய்களிலிருந்து அதிக அளவில் உருவாவதால் அதை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது. ட்ரோன் இயந்திரங்களைப் பயன்படுத்தி கால்வாய்கள், நீர்வழித்தடங்களில் கொசுவை ஒழிக்கும் மருந்து தெளிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் AVIONICS துறை இணைந்து இந்த மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றது. முதற்கட்டமாக தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என ஒரு பகுதிக்கு ஒன்று என்ற கணக்கில் மூன்று ட்ரோன் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி
மாநகராட்சி

நாளொன்றுக்கு மூன்று மண்டலங்களில் ட்ரோன் இயந்திரத்தைப் பயன்படுத்தி மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் தினமும் எந்த ட்ரோன் எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகின்றது என்ற விவரத்தை மாநகராட்சி தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.