ETV Bharat / state

ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸை இணைத்து வைக்கும் பாஜக?!

author img

By

Published : Jul 2, 2022, 1:47 PM IST

பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரௌபதி முர்மு தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக சென்னை வரும் நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனது தரப்பு ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் ஓபிஎஸ்  ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைத்து வைக்கும் பாஜக
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைத்து வைக்கும் பாஜக

சென்னை: அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே மோதல் போக்குத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பாக குடியரசுத்தலைவர் வேட்பாளராகத் திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர், சென்னையில் இன்று (ஜூலை.2) நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக வருகை தர இருக்கிறார். திரௌபதி முர்மு கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் ஓபிஎஸ்
திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம்

குறிப்பாக அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றைத் தலைமை யுத்தம் தீவிரமாக போய்க்கொண்டிருக்கும் சூழலில் இருவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் மற்றும் ஒற்றைத்தலைமை விவகாரம் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது.

இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் குன்னம் ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கெனவே திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கலுக்கு நேரடியாகவே ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லிக்கு தம்பித்துரை அனுப்பி வைக்கப்பட்டார். இன்று நடைபெறக்கூடிய நிகழ்வில் தனித்தனியாக கலந்து கொள்வோமா? அல்லது சேர்ந்து கலந்துகொள்வோமா? என ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட செயல் திட்டம் குறித்து முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர்.பி.ஜெயக்குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் திரௌபதி முர்மு, தெலங்கானாவில் யஷ்வந்த் சின்ஹா...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.