ETV Bharat / state

கழிவு நீர் தேக்கம்: காலரா பாதிப்பால் குடியிருப்புவாசிகள் அவதி - தொற்று நோய்கள்

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை மீனவர் காலனியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவு நீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய்கள் பரவிவருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Drainage water
author img

By

Published : Aug 20, 2019, 6:44 PM IST

சென்னை புதுவண்ணாரப்பேட்டை மீனவர் காலனியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கழிவு நீர் செல்லும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் முழுவதும் சாலை வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

சுகாதாரமற்ற முறையில் கழிவு நீர் தேங்கியுள்ளதால் மலேரியா, டைஃபாய்டு, காலரா உள்ளிட்ட நோய்கள் பரவி அப்பகுதியினர் அவதியுற்றுவருகின்றனர். மேலும், கழிவு நீரில் இருந்து புழுக்கள் உருவாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறி அப்பகுதியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

4 மாடியாக உள்ள குடியிருப்பு கட்டடத்தை ஆறு மாடியாக உயர்த்தி கட்டித்தருவதாக தெரிவித்திருந்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வீடுகளை விட்டு காலி செய்ய அப்பகுதியினரை வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதற்கு அப்பகுதியினர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாகவே செயற்கையாக அடைப்பை ஏற்படுத்தி கழிவு நீர் தேக்கமடையச் செய்ததாக குடிசை மாற்று வாரியம் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல் துறையினர் சமாதானம் செய்தனர். தொடர்ந்து கழுவு நீர் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த ஊழியர்கள் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Intro:குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதுBody:சென்னை புதுவண்ணாரப்பேட்டை மீனவர் காலனியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் 520க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளது குடியிருக்கும் பொதுமக்கள் கழிவுநீர் அடைப்பு காரணமாக 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் கடந்த இரண்டு மாதகாலமாக வீடுகளில் அடைப்பு மற்றும் சாலைகளில் கழிவுநீர் வெள்ளம்போல் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று மலேரியா, டைபாய்டு, காலரா ,போன்ற நோய்கள் பரவுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர் கழிவு நீரில் புழுக்கள் வீடுகளுக்குள் வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்

4 மாடியில் உள்ள வீடுகளை ஆறு மாடிகளாக கட்டித்தருவதாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வீடுகளை காலி செய்ய பொதுமக்களை வற்புறுத்தி உள்ளனர் பொதுமக்கள் காலி செய்யாத காரணத்தினால் செயற்கையாக அடைப்பு
உருவாக்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல் துறையினர் சமாதானம் செய்து கழுவி நீர் வாரியத்துக்கு தகவல் தெரிவித்து அடைப்பை சரி செய்ய முயற்சி செய்தனர்.Conclusion:குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.