ETV Bharat / state

'மருத்துவத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியிருக்கலாம்' - டாக்டர் சாந்தி - etv bharat

மருத்துவத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியிருக்கலாம் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

மருத்துவத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியிருக்கலாம்
மருத்துவத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியிருக்கலாம்
author img

By

Published : Aug 13, 2021, 4:33 PM IST

Updated : Aug 13, 2021, 9:22 PM IST

சென்னை: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மருத்துவ மக்கள் நலத்துறைக்கு ரூ.18,932 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த அறிவிப்பில் சென்ற ஆண்டைவிட ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக இருந்தாலும், கரோனா பேரிடர் காலத்தில் இரண்டு மடங்கு நிதி அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் மருத்துவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மருத்துவத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியிருக்கலாம்

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் சாந்தி கூறுகையில், "கரோனா மூன்றாவது அலை வரலாம் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி அந்தந்த துறைக்கு சரியாக சேர வேண்டும்.

'மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தில் பணி செய்யும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நிரந்தரமாக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு ரூ.741 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ உபகரணங்களை பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் வீண் செலவு குறையும்.

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மற்றும் கலைஞர் காப்பீடு திட்டம் உள்ளிட்டவைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட்: நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் நிதி நுட்ப நகரம்!

Last Updated : Aug 13, 2021, 9:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.