சென்னை: சீனா உள்ளிட்ட 10 நாடுகளில் வேகமாகப் பரவும் கரோனா வைரஸ் பிஎப்.7 (Omicron BF.7). இதன் பரவும் வேகம் அதிகமாக இருந்தாலும், பாதிப்புகள் குறைவாகவே இருக்கிறது என மருத்துவர் ஐஸ்வர்யா வினோத் தெரிவித்துள்ளார்.
உருமாறிய கரோனா வைரஸ் பிஎப்.7 குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துடன் பிரத்யேக நேர்காணலில் ரேலா மருத்துவமனையின் (Rela Hospital, Chennai) நுரையீரல் நிபுணர் டாக்டர் ஐஸ்வர்யா வினோத் புதிய கோவிட் மாறுபாடு - Omicron BF.7 வகையின் பரவல், அறிகுறிகள், தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசுகையில், 'கரோனா பாதிப்பு, ஒமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்ததுதான். ஒமைக்ரான் வைரஸிற்கும் இதற்கும் பெரியளவில் மாற்றம் கிடையாது.
காய்ச்சல், சளி போன்றவையும் இதற்கு அறிகுறிகளாக இருக்கிறது. வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணம் உருமாற்றம் அடைந்ததால் தான். தடுப்பூசி எடுத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சீனாவில் மேற்காெள்ளப்பட்ட ஆய்வில், ஏற்கெனவே உள்ள கரோனா வைரஸினை எதிர்கொள்வதற்கான எதிர்ப்பு சக்தி இதனை தடுக்காது.
இந்த பிஎப்.7 வைரஸ் பெரிய அளவில் பாதிப்பினை உடலில் ஏற்படுத்தவில்லை. மேலும், உடலில் வைரஸ் தாக்கிய 2 நாட்களில் அறிகுறிகள் தெரியும். தமிழ்நாட்டில் முதல், 2ஆம் அலையின் பாதிப்பை உருவாக்கியதை வைத்து பார்த்தாலும், ஒவ்வொரு வைரஸ் பாதிப்பும் நாட்டிற்கு நாடு மாறுபட்டது. இந்தியாவில் இந்த புதிய வைரஸ் சில நபர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதால், மருத்துவரின் அறிவுரையை பின்பற்றி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தொற்றுக்கு முன்கூட்டியே சிகிச்சைப் பெற்றால் குணப்படுத்திக் கொள்ளலாம்.
இறுதியாக, சீனாவில் தொடங்கி 10 நாடுகளில் மீண்டும் வேகமாக பரவும் கரோனா வைரஸ் பிஎப். 7 வேகமாக பரவினாலும், இதன் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: BF.7 பரவல் குறித்து மக்கள் பயப்படத் தேவையில்லை - மருத்துவர்கள் கருத்து!