ETV Bharat / state

'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? - லேட்டஸ்ட் செய்திகள்

'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட்.05) தொடங்கி வைத்த நிலையில், திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்.

author img

By

Published : Aug 5, 2021, 2:19 PM IST

கரோனா மூன்றாம் அலையை நாடு சந்திக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் நோய் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் வகையில் மக்களின் வீடுகளுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்கும் 'மக்களைத் தேடி மருத்துவம்' எனும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆக.05) தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இரண்டு பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று, மருத்துவச் சேவை அளிப்பதைப் பார்வையிட்டு அவர்களுக்கு மருந்துகளையும் ஸ்டாலின் வழங்கினார். இந்தத் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து பயனாளிகளும் மக்கள்தொகை பதிவேட்டின்கீழ் பதியப்பட்டு, அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

மாநிலம் முழுவதும் கரொனா தொற்றைக் கண்காணித்து அத்தியாவசிய சேவைகள் வழங்கி கட்டுக்குள் கொண்டு வருவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று. இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இடைநிலைச் சுகாதாரச் சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள் (Physiotherapists), கிராமிய செவிலியர் ஆகியோரும் இடம்பெறுவர். பொது சுகாதாரத் துறையின் களப்பணியாளர்களும் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவர்.

மருத்துவ சேவைகள்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, வாய் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், மார்பக புற்றுநோய், காசநோய், தொழுநோய், நாள்பட்ட சிறுநீரக நோய்கள், மன ஆரோக்கியம் ஆகியன குறித்த சேவைகள் வழங்கப்படும்.

45 வயது, அதற்கு மேற்பட்டவர்கள், இயலாமையில் உள்ள நபர்கள் ஆகியோருக்கு உயர் ரத்த அழுத்தம் / நீரிழிவு நோய்க்கான மருந்துகளை இல்லங்களுக்கே சென்று களப்பணியாளர்கள் வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

ஒவ்வொரு வட்டாரத்திலும் இத்திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவைக்காக ஈடுபடுத்தப்படும். மேலும் தேவையைப் பொறுத்து இந்த சேவை விரிவாக்கம் செய்யப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து சுகாதார துணை மையங்களுக்கு மருந்துப் பைகள் எடுத்து வந்து வரப்பட்டு பதிவு செய்த பயனாளர்களுக்கு வீடுதோறும் வழங்கப்படும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மருந்துகளின் வீட்டு விநியோகத்திற்காக பட்டியலிடப்பட்ட நோயாளிக்கு மருந்து பெட்டிகள் வழங்கப்படும்.

முதல்கட்டமாக இத்திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் 1,172 சுகாதார துணை மையங்கள், 189 ஆரம்ப சுகாதார மையங்கள், 50 சமூக சுகாதார மையங்கள் உள்ளடங்கும்.

திட்டத்தின் தற்போதைய மதிப்பீடு 257 கோடியே 15 லட்சத்து 78 ஆயிரத்து 350 ரூபாய். 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதையும் படிங்க: உங்கள் இல்லம் நாடி வருகிறது 'மக்களை தேடி மருத்துவம்' - ஸ்டாலின் தொடங்கிவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.