ETV Bharat / state

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் - chennai news in tamil

அதிமுக நிர்வாகியைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது எனக் காவல் துறைக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம் முன்பிணை மனுவிற்குப் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

dont-take-any-coercive-action-against-rajendra-balaji-direction-to-police-mhc
'ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை கூடாது' - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
author img

By

Published : Oct 8, 2021, 2:19 PM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்குச் சென்றபோது அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில், மாவட்ட கிளைச் செயலாளரைத் தாக்கியதாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி உள்ளிட்ட ஐவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்பிணைக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கைத் திரும்பப்பெற்றதால், இவர்களின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர்கள் முன்பிணை கோரி மனு தாக்கல்செய்திருந்தனர்.

அந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது எனவும் காவல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.