ETV Bharat / state

இனி வெளிநாடுகளில் இருந்து நாய்களை இறக்குமதி செய்யலாம்... தடை நீக்கம்!

வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High court
சென்னை உயர்நீதி மன்றம்
author img

By

Published : Jun 9, 2023, 7:43 PM IST

Updated : Jun 9, 2023, 8:11 PM IST

சென்னை: வெளிநாடுகளிலிருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்யத் தடை விதித்து அன்னிய வர்த்தக துறை தலைமை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு நாய் இனங்களைப் பாதுகாப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக, நாய்களை இறக்குமதி செய்யத் தடை செய்ய, கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்னிய வர்த்தக துறை தலைமை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பாணையில் உத்தரவிட்டிருந்தது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து இந்திய கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப், பாலகிருஷ்ண பட் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அவர்களது அந்த மனுவில், ”வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதால் உள்நாட்டு நாய்கள் பாதிக்கப்படும் என எந்த அறிவியல் ஆய்வு பற்றிய தகவல்களும், புள்ளிவிவரங்களும் இல்லாமல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்”. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களை தனிமைப்படுத்தி, பரிசோதித்த பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்காக அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் உள்நாட்டு நாய்களுக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நாய்களால் நோய்கள் பரவும் என மத்திய அரசு கூறும் காரணத்தில் நியாயமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நாய்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை என குறிப்பிட்ட நீதிபதி அனிதா சுமந்த், வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வதற்குத் தடைவிதிப்பதன் மூலம் தான் அந்த இலக்கை எட்ட முடியும் என்பதில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். அதேசமயம் வர்த்தக ரீதியாக நாய்கள் இறக்குமதி செய்யப்படும் முறைகளை நெறிப்படுத்தலாம் என கூறி, மத்திய அரசின் அன்னிய வர்த்தக துறை தலைமை இயக்குநர் 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்.

நாய்கள் இனப்பெருக்கம் சம்பந்தமாகத் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்திவருவதாகத் தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான விதிகளை 8 வாரத்தில் வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிவிப்பை நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வளர்ப்பு நாய்க்கு சீமந்தம்.. சீர்காழி குடும்பத்தின் பாசம்!

Last Updated : Jun 9, 2023, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.