ETV Bharat / state

கோடையில் வாடுகிறதா வண்டலூர் உயிரியல் பூங்கா? - முகச்சுழிப்பில் சுற்றுலாப் பயணிகள்

author img

By

Published : Jun 2, 2022, 9:43 PM IST

வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள் மற்றும் பறவைகள் அதிகளவில் இல்லை என்றும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்றும் சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோடையில் வாடுகிறதா வண்டலூர் உயிரியல் பூங்கா? - முகச்சுழிப்பில் சுற்றுலாப்பயணிகள்!

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவிலே மிகப்பெரிய விலங்குகள் பூங்காக்களுல் ஒன்றாகும். இங்கு விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பூங்கா, கரோனோ கட்டுப்பாட்டுத் தளர்விற்கு பிறகு திறக்கப்பட்டது.

இந்நிலையில், விடுமுறை நாள்களில் அதிகமான பார்வையாளர்களுடனும், வார வேலை நாள்களில் கணிசமான பார்வையாளர்களுடனும் பூங்கா செயல்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் வரத்து வார நாள்களிலே அதிகமாக காணப்படுகிறது.

அதிலும், சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் மிகவும் அதிகமான எண்ணிகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், பொழுதுபோக்கினை முதன்மையாகக் கொண்டு வருகை தரும் பார்வையாளர்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா பெரும் ஏமாற்றத்தை மட்டுமே தருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்குக் காரணமாக, செயற்கை முறையில் விலங்குகளை குளிப்பாட்டும் வசதி இல்லை எனவும், வருகிற சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி கூட இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, சென்னை தி.நகரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கூறுகையில், “90 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து வருகிறோம். ஆனால், சொல்லும் அளவிற்கு செயல்பாட்டில் ஏதும் இல்லை. ஆர்.ஓ தண்ணீர் என்கிறார்கள். அது அப்படி தெரியவில்லை. பணம் கொடுத்து தான் குடிநீர் வாங்கியுள்ளோம்” என்றார்.

தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த மதன் கூறுகையில், “விலங்குகளுக்கு செயற்கை மழை என்று சொன்னார்கள் இங்கு வந்து பார்த்தால், அப்படி ஒன்றும் இல்லை. கழிவறை வசதிகள் குறைவாக இருக்கிறது. அதேநேரம், முறையாக பராமரிக்கப்படாமல் அசுத்தமாகத்தான் கழிவறை உள்ளது” என வேதனை தெரிவித்தார்.

எனவே பொழுதுபோக்கிற்காக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவை சீரமைக்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

இதையும் படிங்க: உயிரியல் பூங்காவைப் பராமரிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.