ETV Bharat / state

ஸ்டான்லி மருத்துவமனையில் முதுகலைப்பயிற்சி மருத்துவர்கள் 3ஆவது நாளாக போராட்டம்

author img

By

Published : Dec 3, 2021, 7:48 PM IST

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுகலை முதலாமாண்டு படிப்பிற்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரி முதுகலைப்பயிற்சி மருத்துவர்கள் 3ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்

சென்னை: அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தமிழ்நாடு உறைவிட மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் முதுகலை முதலாமாண்டு படிப்பிற்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் எனக்கோரி முதுகலை பயிற்சி மருத்துவர்கள் 3ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

கலந்தாய்வை ஒன்றிய அரசு உடனடியாக நடத்த வேண்டும் என கடந்த 2 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் முதுகலை பயிற்சி மருத்துவர்களின் பணிச்சுமையையும், மன உளைச்சலையும் குறைக்கும் வகையில் கலந்தாய்வை நடத்த ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், மாநில அரசின் கையில் உள்ள 50 விழுக்காடு மருத்துவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்த வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மருத்துவர்கள் இல்லை

இது குறித்து மருத்துவர் ராஜ் கூறுகையில், "முதுகலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் எனக்கோரி உறைவிட மருத்துவர்கள் கடந்த 3 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கரோனா 3ஆவது அலை வந்தால் அதனை சமாளிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை.

மருத்துவர்கள் போராட்டம்

எனவே முதுகலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். முதுகலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக தமிழ்நாடு அரசின் கையில் இருக்கும் 50 விழுக்காடு இடத்தை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா கிளினிக் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் மருத்துவர்களை அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த வேண்டும். அவ்வாறு பணியமர்த்தினால் ஓரளவிற்கு எங்களின் பணிச்சுமை குறையும். இவைகளை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறோம்" என்றார்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

மருத்துவர் சுதர்சனன் கூறியதாவது, "எங்களின் 3 கோரிக்கைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசு அலுவலர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த எங்கள் பிரதிநிதிகள் சென்றுள்ளனர். டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதன்பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அவசர சிகிச்சைப் பிரிவு உள்பட அனைத்து மருத்துவப் பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

மருத்துவர்கள் போராட்டம்

மிகுந்த மன உளைச்சல்

மருத்துவர் தேன்மொழி கூறியதாவது, "கடந்த 2 ஆண்டுகளாக 90 மருத்துவர்கள் பணியாற்றும் இடத்தில் 30 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறோம். ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணி நேரம் வரை ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறோம். இதனால் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். இந்த தொடர் பணியால் எங்களுடைய கல்வியும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.

மருத்துவர்கள் போராட்டம்

3 மருத்துவர்கள் பணியாற்றும் இடத்தில் ஒருவர் மட்டும் இருப்பதால் உடல்நிலை சரியில்லை என்றால் கூட பணிக்கு சென்று வருகிறோம். ஓய்வில்லாத தொடர் பணி மற்றும் உறக்கமின்மையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

மன உளைச்சல் அதிகம் இருப்பதால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முழுமையான மருத்து சிகிச்சை தரமுடியாத நிலை உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கர் முதலமைச்சருடன் சந்திப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.