சென்னை: மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், புகழ்பெற்ற மருத்துவருமான டாக்டர் பி.சி.ராய் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர், மக்களின் முதலமைச்சர், அண்ணல் காந்தியின் நேசத்துக்குரிய மருத்துவர் பி.சி. ராயின் பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர்கள் தினம்! பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்!" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய மருத்துவர் தினம்- யார் இந்த பி.சி ராய்!