ETV Bharat / state

முதுகலை மருத்துவக் கல்வி வரைவை ரத்து செய்ய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல் - doctor association

தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவை ரத்து செய்யவேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

doctor-association-urges-to-withdraw-the-doctor-pg-draft
முதுகலை மருத்துவக் கல்வி வரைவை ரத்து செய்ய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்
author img

By

Published : Aug 29, 2021, 8:06 PM IST

சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் எழுதிய கடிதத்தில், “தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் சமூகத்திலிருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதேபோல் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதித்துவம் இல்லை.

ஜனநாயக ரீதியாக எந்த விவாதமும் இல்லாமல் ஒருதலைப்பட்சமாக இந்த வரைவில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. சரியான காரணம் இல்லாமல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன" என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், முதுகலை மருத்துவக் கல்வி வரைவில் இருக்கும் எட்டு பெரிய தவறுகளைக் குறிப்பிட்டு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள், பெண் மருத்துவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நாட்டின் வளர்ச்சி என அனைத்துக்கும் இந்த முதுகலை மருத்துவக் கல்வி வரைவு எதிராக இருப்பதால் உடனடியாக இந்த வரைவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தற்காலிக தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.