ETV Bharat / state

புயலுக்கு பெயர் வைப்பத்தில் இவ்வளவு சிக்கலா? எதற்காக புயலுக்கு பெயர் வைக்கிறார்கள் தெரியுமா? - World Meteorological Organization

Michaung cyclone: ஒக்கி, தானே, நீலம், மாண்டஸ், நிவர், நிஷா ஆகிய புயல்களின் பாதிப்புகள் மற்றும் அதன் பெயர்களை மக்கள் இன்றளவும் மறந்திருக்க முடியாது. தற்போது வங்ககடலில் உருவாகியுள்ள புயலுக்கு மிக்ஜாம் என பெயர் வைக்கபட்டுள்ளது. இந்த புயலுக்கு பெயர் எப்படி வைக்கப்படுகிறது என விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

புயல்களும் பெயர்களின் பின்னனியும்
புயலுக்கு எதற்காக பெயர் வைக்கிறார்கள் தெரியுமா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 3:16 PM IST

சென்னை: உலகில் ஒவ்வொரு நாளும் மழை, வெயில், காற்று, சூறாவளி, சுனாமி என வெவ்வேறு இயற்கை பேரிடர்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் புயலுக்கு மட்டும் தான் பெயர் சூட்டப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து பார்க்கையில் பல சுவாரஸ்யமான வரலாறுகள் தெரிய வந்துள்ளன.

புயல் எப்படி உருவாகிறது?

ஒரு குழந்தை எப்படி படிப்படியாக வளர்கிறதோ அதேபோல தான் புயலும் படிப்படியாக வளர்கிறது. இந்த வளர்ச்சி 3 படி நிலைகளாக பிரிக்கப்படுகின்றன.

  • காற்றழுத்த தாழ்வு பகுதி
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம்
  • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இந்த நிலைகளை கடந்த பின் வலுப்பெற்று ஒரு புயல் உருவாகிறது. அப்படி புயலாக வலுப்பெறும் பட்சத்தில் அதற்கு ஒரு பெயர் சூட்டப்படுகிறது. ஒவ்வொரு புதிய புயல் உருவாகும் போதும் அவற்றுக்கு வெவ்வேறு பெயர்கள் வைக்கப்படுகின்றன. எதற்காக இதுபோல பெயர்கள் உருவாக்கப்படுகிறது.

ஏன் ஒரே பெயர்களை அடுத்த முறை பயன்படுத்துவதில்லை என்பது போன்ற கேள்விகள் சாமானிய மக்களிடையே இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த சந்தேகங்களுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் விளக்கம் அளித்து உள்ளார்.

புயலுக்கு பெயர் வைத்த வரலாறு ?

19ஆம் நூற்றாண்டில், வானிலை விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் புயல்களுக்கு தன்னிச்சையாக பெயா் சூட்டி வந்தனர். அப்போது தங்களுக்கு பிடிக்காத பெண்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் பெயர்களை சூட்டி வந்தாா்கள் என்று கூறப்படுகிறது. புயல்களுக்குப் பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கி வைத்தவர் பிரிட்டனை சேர்ந்த வானியல் விஞ்ஞானி கிளெமென்ட் ராக் என்பவா் தான்.

இவர் முதலில் பிரிட்டனிலும், பின்னர் ஆஸ்திரேலியாவிலும் வானிலை அளவீடுகளை கருவிகள் கொண்டு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து வந்துள்ளார். முதலில் கிரேக்க எழுத்துக்களை கொண்ட பெயர்களையும் கிரேக்க புராணங்களில் காணப்படும் பெயர்களையும் அவர் புயல்களுக்கு சூட்டி வந்ததாக கூறப்படுகிறது.

ஏன் புயலுக்கு பெயர் வைக்கப்படுகிறது ?

குறிப்பிட்ட புவியியல் இடத்தில் அல்லது பூமியின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் புயலானது உருவாகக்கூடும். அப்படி உருவாகும் வெவ்வேறு புயல்களை அறியவும், அவற்றை வேறுபடுத்திக் காட்டவும் தான் இந்த புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் வந்ததாக கூறப்படுகிறது.

புயலுக்கு பெயர் வைப்பது யார் ?

உலக சுகாதார அமைப்பை போலவே வானிலை குறித்த ஆய்வுகளுக்காக 1950 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் உலக வானிலை மையம் (World Meteorological Organization). இந்த மையத்தில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் உள்ள நாடுகள் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களுக்கு தான் புயலுக்கு பெயர் வைக்கும் அதிகாரம் உள்ளது.

இந்தியா வட இந்திய பெருங்கடல் மண்டலத்தில் வருகிறது. இதன் தலைமையகம் இந்தியாவில் டெல்லியில் உள்ளது. இந்த மண்டலத்தில் இருக்கும் 13 நாடுகளின் பரிந்துரைப்படி, உருவாகும் புயல்களுக்கு பெயர்கள் வைக்கப்பட்டு வருகிறது. அரபிக்கடல், இந்திய பெருங்கடல், வங்கக்கடல் ஆகியவற்றில் உருவாகும் புயல்களுக்கு இந்த 13 நாடுகளால் பல பெயர்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

அந்த நாடுகள்: வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகளும் தான் உருவாகும் புயலுக்கான புதிய பெயர்களை பரிந்துரை செய்கிறது.

கடந்த முறை உருவான புயலுக்கு இந்தியா சார்பில் "தேஜ்" என பெயரிடப்பட்டு இருந்தது. அதன் பிறகு உருவான இரண்டு புயல்களுக்கு மாலத்தீவு சார்பில் ‘மிதிலி’ எனவும், ஈரான் சார்பில் ‘ஹாமுன்’ எனவும் பெயர் வைக்கப்பட்டது.

எப்படிப்பட்ட பெயர்கள் வைக்கக் கூடாது?

  • இந்த நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளன. இந்த புயலின் பெயரில் எவ்வித அரசியல், அரசியல் பிரபலங்களின் பெயர்கள், கலாசாரம், மத நம்பிக்கை, இனம் போன்றவை பிரதிபலிக்கக் கூடாது.
  • உலகளவில் வாழும் மக்கள் எவ்விதத்தவரின் உணர்வையும் காயப்படுத்தும்படி பெயர்கள் இருக்கக் கூடாது.
  • மிகவும் கொடூரமானதாக பெயர் இருக்கக் கூடாது.
  • சிறியதாகவும், உச்சரிக்க எளிதாகவும் யாரையும் காயப்படுத்தாத வகையில் பெயர் இருக்க வேண்டும்.
  • பெயரின் அளவு அதிகபட்சமாக 8 எழுத்துகளில் இருக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்படும் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்படும் பெயரை நிராகரிக்க 13 நாடுகளின் வானிலை ஆய்வு நிபுணர் குழுவுக்கு உரிமை உண்டு.
  • பெயர் சூட்டல் அமல்படுத்தப்படும் முன்பாக கூட அதை மறுஆய்வுக்குட்படுத்த அந்த குழுவுக்கு அதிகாரம் உண்டு.
  • ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள் மீண்டும் வைக்கப்பட கூடாது.
  • அவைப் பாலினம், அரசியல், மத நம்பிக்கைகள், பண்பாடுகள் ஆகியவற்றுக்கு சம்மதம் இல்லாமல் தனித்துவமாகவும் நடுநிலையாகவும் இருக்க வேண்டும்.

எப்போது பெயர் சூட்டும் பழக்கம் தொடங்கியது?

இந்த பெயர் சூட்டும் நடைமுறை பல மேலை நாடுகளில் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் தான் இந்த நடைமுறை தொடங்கியது. அகவரிசைப்படி உள்ள நாடுகள் அளிக்கும் பெயா்களுக்கு ஏற்ப பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

தற்போது ஒருவாகியுள்ள புயலுக்கு யார் பெயர் வைத்தது?

2020ஆம் ஆண்டு உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் 13 பெயர்களை பரிந்துரைத்தன. இந்த நாடுகள் பரிந்துரைத்த 169 பெயர்கள் கொண்ட பட்டியல் தயாராக உள்ளது. இதை வைத்து தான் வட இந்தியாவில் உருவாகும் புயல்களுக்கு அடுத்தடுத்து பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது தென்மேற்கு வங்ககடலில் உருவாகியுள்ள புதிய புயலுக்கு மியான்மர் நாட்டால் பரிந்துரைக்கபட்ட "மிக்ஜாம்" எனும் பெயர் வைக்கபட்டுள்ளது.

இதற்கு அந்நாட்டின் பர்மீஸ் மொழியில், "வலிமை மற்றும் எதிர்த்தெறிதல்" என பொருள் தருகிறது. இதற்கு பின் வரும் புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்த ரெமல் என்ற பெயரும், அதன்பின் வரும் புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த அஸ்னா எனும் பெயரும் தான் சூட்டப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அச்சுறுத்தும் புயல்: துறைமுகத்தில் 'எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவது யாருக்காக?..அவை எதை உணர்த்துகின்றன?..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.