ETV Bharat / state

'மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பரப்புரை செய்யக் கூடாது' - places where the reconciliation

சென்னை: மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 இடங்களிலும் பரப்புரை மேற்கொள்ள அனுமதியில்லை என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சத்ய பிரதா சாஹூ
author img

By

Published : May 9, 2019, 3:10 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த சத்யபிரத சாகு, 'மாநிலத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளுக்கு மறுதேர்தல் நடைபெறவுள்ளது. இந்தப் பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள அரசியல் கட்சியினருக்கு அனுமதி கிடையாது.

வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்கு இயந்திரம், விவிபேட் உள்ளனவா என்பதை ஆய்வு செய்துவருகிறோம். மறுவாக்குப்பதிவு நடைபெறும் இயந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள்முன்னிலையில் பரிசோதித்த பின்னரே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும்.

மொத்தம் 46 இடங்களுக்கு மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் 13 இடங்களுக்கு மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 248ஆவது வாக்குச்சாவடி, ஆண்டிபட்டியில் உள்ள 67ஆவது வாக்குச்சாவடி, பெரியகுளத்தில் உள்ள 197ஆவது வாக்குச்சாவடி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் உள்ள 8 வாக்குச்சாவடிகள், கடலூர் மாவட்டத்தில் 210ஆவது வாக்குச்சாவடி, திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி ஆகியவை அடங்கும்' என கூறினார்.

_சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

மறுவாக்கு பதிவு நடைபெற உள்ள 13 இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை - 23ம் தேதி வரை பெறப்படும் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

13 தேர்தல் மையங்களில் மறுத்தேர்தல் நடைபெற உள்ளது,  அதற்கு தேவைக்கேற்ப வாக்குபதிவு இயந்திரம் (  Electronic Voting Machines) மற்றும் விவி பேட் ( Voter-verified paper audit trail ) ஆகியவை உள்ளதா என பார்த்து வருகிறோம்,அதற்கு ஏற்ப தான் கோவையில் இருந்து தேனிக்கு வாக்கு இயந்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டது.

மறுவாக்கு பதிவு நடைபெற உள்ள இடங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சோதனை செய்த பின்னரே 19 தேதி தேர்தலுக்கு பயன்படுத்தபடும்.

மொத்தம் 46 இடங்களுக்கு மறுவாக்கு பதிவுக்கு அறிக்கை அனுபட்ட நிலையில் 13 இடங்களுக்கு மட்டுமே மறுவாக்கு பதிவு நடைபெறும், மீதம் உள்ள இடங்களுக்கு மருவாக்கு பதிவு நடைபெறாது.

46 இடங்களுக்கு மறுவாக்கு பதிவு கோரிய நிலையில், 13 இடங்களை உள்ளடக்கிய மறுவாக்கு பதிவு நடைபெறவுள்ள  ஈரோடு,ஆண்டிபட்டி,பெரியகுளம் எதனால் மறுவாக்கு பதிவு நடத்தப்படுகிறது என்பது குறித்து சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

கோவையில் இருந்து தேனிக்கு வாக்கு இயந்திரங்கள் மாற்றம் செய்யப்படும் பொழுது தலைமை தேர்தல் ஆணையரிடம் முறையான அனுமதி பெறப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் முறையாக அரசியல் கட்சி பிரமுகர்களிடம் தகவல் தெரிவித்த பின்னர் தான் மெஷின்கள்  கொண்டு வரப்பட்டு உள்ளது.

வாக்கு என்னும் போதிய பாதுகாப்பு இல்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியதோடு தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், வாக்கு என்னும் மையங்களில் போதுமான பாதுகாப்பு உள்ளது நேர்மையான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவித்தார்.

மே மாதம் 23ம் தேதி வரை பெறப்படும் தபால் வாக்குகள் , வாக்கு எண்ணிக்கையின் போது கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

அதேபோல, 13 இடங்களில் மறுவாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் அந்த இடங்களில் அரசியல் காட்சி தலைவர்கள் மீண்டும் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.

13 இடங்களில் மறுவாக்கு பதிவு நடத்துவதற்கான காரணங்கள்:

ஈரோடு:

ஈரோடு மக்களவைத் தொகுதியில் காங்கேயம் பகுதியில் உள்ள எண் 248 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு காரணம் தேர்தல் நடத்தும் அதிகாரி மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து அழிக்கத் தவறிய காரணத்தால் அங்கு மறு வாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேனி:

தேனி மக்களவைத் தொகுதியில் ஆண்டிப்பட்டி  வாக்குச்சாவடி எண் 67 மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் பதிவான சீட்டுகளை நீக்காமல் வாக்குப்பதிவு நடத்தியதால் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதேபோல தேனி மக்களவைத் தொகுதி பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் எண் 197ல் மாதிரி வாக்குப்பதிவிற்கு ஒரு  இயந்திரம் வாக்குப்பதிவு இயந்திரம் என இரண்டு வாக்கு பதிவிற்கு பயன்படுத்தியதால் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி:

தருமபுரி மக்களவைத் தொகுதி பாப்பிரெட்டி பகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடவில்லை.

கடலூர்:

கடலூர் மக்களவை தொகுதியில் திருவதிகை பகுதியில் வாக்குச்சாவடி எண் 210ல் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பட்டன்கள் சரியாக இயங்கவில்லை இதன் காரணமாக மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் பூந்தமல்லி பகுதியில் மாதிரி வாக்குப்பதிவில் நடைபெற்ற வாக்குப்பதிவை அழிக்காமல் தேர்தல் நடத்தியதன் காரணமாக மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.     Visual are sent by reporter app.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.