ETV Bharat / state

அக்.14-இல் திமுக மகளிர் உரிமை மாநாடு.. சோனியா காந்தி பங்கேற்பதாக கனிமொழி அறிக்கை! - ஈடிவி பாரத்

DMK Women's Rights Conference: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மகளிர் அணி நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உள்பட பல்வேறு அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்வதாக கனிமொழி எம்.பி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

DMK Women's Rights Conference Sonia Gandhi Priyanka Gandhi will participate Kanimozhi MP reports
திமுக மகளிர் உரிமை மாநாடு: சோனியா காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பதாக கனிமொழி எம்.பி அறிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 3:34 PM IST

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மகளிர் அணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவருமான கனிமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "அனைத்துத் துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமைக்காகவும் கருணாநிதி பல்வேறு மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார். அரசு வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்டவற்றை திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி சட்டமாக்கினார்.

தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வாயிலாக, 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்', 'பெண்களுக்குக் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம்', 'புதுமைப் பெண் திட்டம்', 'மகளிர் சுய உதவிக் குழுக்கள்', 'மகளிரை அர்ச்சகராக்கியது' என பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களை அடுத்தடுத்துச் செயல்படுத்தி வருகிறார்.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது திமுகவின் நீண்ட கால கோரிக்கை. அத்தகைய மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால மறதிக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஆனால் அதுவும், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அமலுக்கு வர முடியாத நிலையில், 2029ஆம் ஆண்டு வரும் எனத் தெரிவித்துள்ளனர். அதுவும் நிச்சயமற்றதாக உள்ளது.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இணைத்து பேச தனபாலுக்கு தடை!

எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் வருகின்ற 14.10.2023 (சனிக்கிழமை) அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட INDIA கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

பெண்ணுரிமைப் போற்றும் இந்த மாநாட்டில், திமுக மகளிர் அணியைச் சார்ந்த அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளிர் சகோதரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: "நாடாளுமன்றம் ஒரு பொம்மையாக மாறி முழு அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு செல்ல நேரிடலாம்" - திருச்சி சிவா பரபரப்பு பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.