சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர் ”பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது மாணவர்களுக்கு எதிரானது.
புதிய கல்விக் கொள்கையை ஆர்எஸ்எஸ் காவி கொள்கையுடன் இணைத்து பாஜக அரசு உருவாக்கி உள்ளது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் என்பது இந்தியாவின் பன்முகத் தன்மைக்குச் சவாலாக அமையக்கூடிய தேர்தலாக இருக்கின்றது.
இந்தியா கூட்டணிக் கட்சிகளின், மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து ’யுனைடேட் ஸ்டுடென்ட்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இதில் 14 மாணவர் அமைப்புகள் ஒன்று இணைந்து, ’தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம் பாஜகவை விலக்குவோம்’ என்கின்ற முழக்கத்தோடு, நாடாளுமன்றத்தை நோக்கி மிகப்பெரிய அளவில் மாணவரணி பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் வருகின்ற 12ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த பேரணியில், திமுக சார்பில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்வார்கள், இதில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சமாஜ்வாதி,ராஷ்ட்ரீய ஜனதா தளம், எஸ்எப்ஐ, விசிக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாணவ அமைப்புகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
இது தொடர்பாகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும், பேரணியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, சுவரொட்டிகள் ஒட்டவுள்ளோம். மேலும் இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம்.
ஆளுநருக்கு வருகைக்கு எதிர்ப்பு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஜெகநாதன், ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதற்காகத் தமிழக ஆளுநர் செல்கின்றார்.
ஊழல் குற்றச்சாட்டப்பட்ட துணைவேந்தர்.இன்னும் சஸ்பெண்ட் செய்யப்படாமல் இருக்கக் கூடிய இந்த சூழ்நிலையில், ஆளுநர் அங்கு செல்வது கண்டனத்திற்கு உரியது. மேலும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழா போன்ற எந்தவித பெரிய நிகழ்ச்சியும் இல்லாத சூழ்நிலையில் ஆளுநர் அங்கு செல்வதற்கான அவசியம் என்ன? எனக் கேள்வி எழுப்பிய அவர் இதனைக் கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும், இதில் ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: தண்ணீர் பாட்டிலில் 2.4 லட்சம் பிளாஸ்டிக் துகள்கள்! அச்சுறுத்தும் மைக்ரோ பிளாஸ்டிக்! தீர்வு என்ன?