கோவை, நீலகிரி உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலையில் மரங்கள் விழுந்தன. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினர், பொதுமக்களை பத்திரமான இடத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, வெள்ளம் பாதித்த இடங்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்துக்காக திமுக சார்பில் 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, மயிலாப்பூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சேகரித்த ரூ.13 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.