திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதலைப் பெறாமல் சட்டப்பிரிவு 370-ஐ பயன்படுத்தி ஒரு ஜனநாயகப் படுகொலையை இன்றைக்கு மத்திய பாஜக அரசு அரங்கேற்றி இருக்கிறது.
மாநில அந்தஸ்திலிருந்து லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது கண்டனத்திற்குறியது. இந்த ஜனநாயக விரோத செயலுக்கு அதிமுகவும் துணை போய் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
மேலும் அவர், இனி அதிமுக தனது கட்சி பெயரை அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று வைத்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்று சாடினார்.
காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும் வரை குடியரசுத் தலைவரின் இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.