குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை மக்கள் பதிவேட்டை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 8 ஆம் தேதி வரை, தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டன. இந்த கையெழுத்துகளை டெல்லியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், வரும் 17ஆம் தேதி குடியரசு தலைவரிடம் வழங்க உள்ளனர். இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்துகளை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் அபூபக்கர், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்க பாலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாராதி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க...சென்னை போலீசுக்கு எதிராகப் போராடிய ஜாமியா மாணவர்கள் மீது டெல்லி போலீஸ் தடியடி