ETV Bharat / state

‘தடையை மீறி திமுக நடத்தும் பேரணி’ - சிசிடிவியை சரிபார்க்கும் பணியில் போலீஸ்! - சென்னையில் திமுக நடத்தும் பேரணி

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தடையை மீறி திமுக நடத்தும் பேரணியில், ஏதேனும் வன்முறை நடந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வகையில் காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராக்களை சரி செய்து வருகின்றனர்.

சிசிடிவியை சரிபார்க்கும் பணியில் காவல் துறை
சிசிடிவியை சரிபார்க்கும் பணியில் காவல் துறை
author img

By

Published : Dec 22, 2019, 8:08 PM IST

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாளை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து பேரணியாகச் சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர். அந்தப் பேரணி தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து, லேங்ஸ் தோட்டச் சாலை வரை நடைபெறுகிறது.

பேரணியில் பல்வேறு அமைப்பினர் கலந்துகொள்ள உள்ளதால் காவல் துறையினர் அனுமதி மறுத்திருந்தனர். இதனால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

சிசிடிவியை சரிபார்க்கும் பணியில் காவல் துறை

இதையடுத்து, காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, பேரணியின்போது வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதுகின்றனர். எனவே, வன்முறையில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்காக இந்த சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து கண்காணிப்புக் கேமராக்களையும் காவல் துறையினர் சரி செய்து வருகின்றனர்.

இந்த பேரணியில், கலவரம் ஏற்படுத்தும் வகையில் யாரேனும் முன்கூட்டியே நுழைந்துவிடாத வகையில் காவல் துறையினர் சாலைகளை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி - அழைப்பு விடுத்த திமுக!

Intro:
அனுமதியை மீறி திமுக பேரணி

போலீஸ் சிசிடிவி கேமரா சரிபார்க்கும் பணி தீவிரம்

Body:சென்னை,,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியை மீறி திமுக நடத்தும் பேரணியில் வன்முறை நடந்தால் கண்டுபிடிப்பதற்காக போலீசார் சிசிடிவி கேமராக்களை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நாளை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணியாக புறப்பட உள்ளனர். அந்தப் பேரணி தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்து புறப்பட்டு பாந்தியன் சாலை வழியாக ருக்மணி லட்சுமிபதி சாலை வழியாக லங்க்ஸ் ரோடு வரை நடைபெறுகிறது.

பேரணியில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளதால் காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் காவல் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பேரணியின் போது வன்முறை நடக்க வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர். எனவே வன்முறையில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்காக இந்த சாலையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் சரி பார்த்து வருகின்றனர்.
இந்த சாலையில் கலவரக்காரர்கள் யாரும் முன்கூட்டியே நுழைந்து விடாத வகையில் காவல்துறையினர் அவர்களின் கட்டுப்பாட்டில் தற்போது கொண்டு வந்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.