ETV Bharat / state

'கட்சிக்கொடியை 3 நாள்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடுக' - திமுக - DMK press release for J. Anbazhagan demise

ஜெ. அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கழக அலுவலகங்களில் கட்சிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தும் திமுக!
அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தும் திமுக!
author img

By

Published : Jun 10, 2020, 1:37 PM IST

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெ. அன்பழகன் இன்று காலை காலமானார். சேப்பக்கம் - திருவல்லிக்கேணி திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜெ. அன்பழகனின் மறைவுக்கு திமுக சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், “திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் மறைவினையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூன் 10) முதல் மூன்று நாள்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் மூன்று நாள்களுக்கு ஒத்திவைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்னதாக, இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியதுபோல அன்பழகனின் மறைவு அதிர்ச்சியளிப்பதாகத் திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: 'இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது' - ஜெ. அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.