ETV Bharat / state

'கேரள அரசின் முன்னுதாரணத்தை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும்' - ஸ்டாலின் வலியுறுத்தல் - Kerala CM

சென்னை: கேரள அரசை முன்னுதாரணமாக தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு பின்பற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
author img

By

Published : Jan 12, 2021, 10:29 AM IST

கேரள அரசை முன்னுதாரணமாக தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு பின்பற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ''கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, கரோனா பரவலின் தொடக்கத்திலிருந்தே எல்லா வகையிலும் முழு முனைப்புடன் மக்கள் நலனைக் காத்து வருவதில் தேவையான அக்கறை செலுத்தி வருகிறது. பேரிடர் காலத்தில், அனைத்துத் துறைகளும், அனைத்துத் தொழில்களும் வருமான இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கான வரிச் சலுகைகளையும் கால அவகாசத்தையும் கேரள அரசு வழங்கி வருகிறது.

அதனடிப்படையில், திரைத்துறைக்கான சலுகைகளையும் கேரள இடதுசாரி அரசு அறிவித்துள்ளது. வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை உள்ளாட்சி கேளிக்கை வரிகள் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. திரையரங்குகள் 50 விழுக்காடு இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 மாதங்களுக்கான திரையரங்க மின்கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி எனவும் அறிவித்துள்ளது. சொத்து வரி செலுத்தவும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திரைத்துறையை 'கனவுத் தொழிற்சாலை' என அழைக்கின்றனர். பல ஆயிரம் குடும்பத்தினருக்கு வாழ்வளித்து வந்த திரைத்துறையில் ஏற்பட்ட முடக்கத்தால், அத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். அதனைக் கருத்தில்கொண்டு கேரள அரசு காட்டியுள்ள முன்னுதாரணத்தைப் பின்பற்றி, மின்கட்டணச் சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை அதிமுக அரசு வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

திரைத்துறை மட்டுமின்றி, கரோனா பேரிடர் காலத்தில் பாதிப்பிற்குள்ளான அனைத்துத் தொழில் சார்ந்த குடும்பத்தினரும் தங்கள் வாழ்வாதாரத்தினை மீட்டிடும் வகையில் இத்தகைய சலுகைகளை வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'விடியலுக்கான வெளிச்சத்தைக் கொண்டுவரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.