இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரி வழங்குவது பச்சை துரோகம் என்றும், தமிழ்நாடு இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனிதநேயமின்றி தட்டிப்பறிக்கும் செயல் பாஜக ஆட்சியில் பெருகிவிட்டது எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
அதேபோல், மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் வட மாநிலத்தவருக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் பாஜக - அதிமுக அரசுகளின் பச்சை துரோகத்துக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் 90 விழுக்காடு தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தமிழ்நாடு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெருக்குவதே திமுகவின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.