சென்னை: டெல்டா மண்டலம், தென் மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம் என 4 மண்டலங்களைத் தொடர்ந்து சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களின் 12 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் இன்று (நவ.5) திருவள்ளூரில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.
-
#Live: திருவள்ளூர் - சென்னை மண்டல வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம்https://t.co/rXkm9bWYXs
— M.K.Stalin (@mkstalin) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Live: திருவள்ளூர் - சென்னை மண்டல வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம்https://t.co/rXkm9bWYXs
— M.K.Stalin (@mkstalin) November 5, 2023#Live: திருவள்ளூர் - சென்னை மண்டல வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம்https://t.co/rXkm9bWYXs
— M.K.Stalin (@mkstalin) November 5, 2023
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையுடன் தொடங்குவதாக இருந்த நிலையில் நேற்று (நவ.4) மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் காணொளி காட்சி வாயிலாகச் சிறிது நேரம் தொண்டர்களிடையே மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியில் கூறும் போது, "இந்த நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து உங்களை எல்லாம் சந்தித்து உரையாற்றாமல் போனதற்காக நான் முதலில் என்னுடைய வருத்தத்தை மிகுந்த பணிவோடு உங்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக் கூடிய அனைவரையும் தனித்தனியாகப் பாராட்ட எனக்கு ஆசை ஆனால், தொண்டை சரியில்லாத காரணத்தால் உண்மையா பாடுபட்டு பணியாற்றிய நம்முடைய கட்சி உடன்பிறப்புகள், சகோதரர்கள், நண்பர்கள், நிர்வாகிகள், பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எல்லாருக்கும் மேலாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடன்பிறப்புகள் அத்தனை பேருக்கும் என்னுடைய பணிவான நன்றியையும் வணக்கத்தை நான் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் அங்கு வரவில்லை என்றாலும் என்னுடைய நினைவுகள் எல்லாம் அங்கு நிகழ்வு எப்படிச் செல்கிறது. அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. எப்படி சென்று கொண்டு இருக்கும் என்பது தான் என்னுடைய சிந்தனை எல்லாம் இருப்பதாகவும், தொடர்ந்து அவைகளைப் பற்றித் தான் விசாரித்து வருவதாகவும், அதனால் யாரும் நீங்க என்ன தவறா நினைச்சுக்க மாட்டீங்கன்னு கருதுகிறேன்.
அதிகம் பேசக்கூடாது என மருத்துவர்கள் என்னை கட்டாயப்படுத்தியுள்ளனர். அதையெல்லாம், மீறி உங்களைப் பார்க்க வேண்டும் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டுமென இங்கு வந்து அமர்ந்திருக்கிறேன். நான் பேச வேண்டியதை கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசுவார்" என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசு மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!