ETV Bharat / state

திமுக பிரமுகர் கொலை வழக்கு - தலைமறைவாக இருந்த கூலிப்படை தலைவன் கைது

author img

By

Published : Mar 22, 2022, 10:08 AM IST

திமுக பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த கூலிப்படை தலைவன் முருகேசனை காவல்துறையினர் கைது செய்தனர்.

திமுக பிரமுகர் கொலை வழக்கு
திமுக பிரமுகர் கொலை வழக்கு

சென்னை: திமுக பிரமுகரான செல்வம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மடிப்பாக்கம் அருகே அவரது கட்சி அலுவலகத்தின் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உள்ளாட்சித் தேர்தல் தேதி நெருங்கி வந்த நிலையில் திமுக பிரமுகர் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல் துறையினர் 6 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும், அவரது மனைவிக்கு மடிப்பாக்கம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் சீட் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டதா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 3ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே கூலிப்படையைச் சேர்ந்த விக்னேஷ், புவனேஷ்வர், சஞ்சய், கிஷோர் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த மற்றொரு நபரான அருண் என்பவர் பிப்ரவரி 15ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

முருகேசன் தான் கூலிப்படையின் தலைவன் என்பதால் காவல் துறையினர் சரணடைந்த அருணை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிஷோர் என்பவர் மடிப்பாக்கம் செல்வத்தை கொலை செய்ய தங்களை வரவழைத்ததாகவும் கொலைக்கான காரணம் தங்களுக்கு தெரியாது என அருண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கூலிப்படை தலைவனான முருகேசனை தனிப்படை காவல் துறையினர் கடந்த 13ஆம் தேதி வியாசர்பாடியில் கைது செய்துள்ளனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

விசாரணையில், மடிப்பாக்கம் குபேரன் நகரில் இடப்பிரச்சினை காரணமாக செல்வத்திற்கும், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி முத்து சரவணன், பாபண்ணன் ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டதாகவும், அந்த இடத்தில் கூலிப்படை தலைவன் முருகேசன் இரண்டு முறை பெயர் பலகையை வைத்தபோது அதனை செல்வம் அகற்றியதாக தெரிகிறது.

இதனால் கடும் கோபத்தில் இருந்த ரவுடி கும்பல் செல்வத்தை கொலை செய்ய முடிவு செய்து, பிரபல ரவுடி முத்து சரவணன் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்ததாகவும், அனைவரும் வாட்ஸாப் காலில் தான் அனைத்து வேலைகளையும் கொடுத்ததாகவும், மற்ற விவரங்கள் ஏதும் தெரியாது என முருகேசன் தெரிவித்தார். தொடர்ந்து தனிப்படை காவல் துறையினர் முத்து சரவணன், பாபண்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இரிடியம் தொழில்... ரூ.1.80 கோடி மோசடி... துணை நடிகர் காவல் ஆணையரிடம் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.