ETV Bharat / state

'முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் எனப் பொருள்' - ரஜினிக்கு முரசொலி பதிலடி - Tughlaq Festival Rajinikanth speech

சென்னை: துக்ளக் விழாவில் முரசொலி நாளிதழ் குறித்து பேசிய ரஜினிகாந்தின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக "முரசொலி வைத்திருந்தால்" என்ற தலைப்பில் முரசொலி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

dmk
dmk
author img

By

Published : Jan 18, 2020, 10:13 AM IST

துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் பேசுகையில், ”முரசொலி வைத்திருந்தால் திமுககாரன் என்றும் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி எனவும் சொல்லிவிடலாம்” எனத் தெரிவித்தார்.

இந்தக் கருத்து திமுகவினரிடையே கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. சமூக வலைதளங்களிலும் இது பேசுபொருளாக மாறியது. நெட்டிசன்களும் தங்களது பங்கிற்கு ரஜினியின் கருந்தை கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்கவிட்டிருந்தனர்.

ரஜினியை விமர்சித்த உதயநிதி

திமுக தரப்பில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ரஜினி கருத்துக்கு டிவிட்டர் மூலம் கடும் எதிர்ப்பை பதிவுசெய்திருந்தார். அதில், ”காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

’முரசொலி வைத்திருந்தால் தமிழன்’

இதனைத் தொடர்ந்து இன்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலியில், "முரசொலி வைத்திருந்தால்" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ”முரசொலி வைத்திருந்தால் தமிழன், திராவிடன், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்பவன், ஆண்டான் அடிமைக்கு எதிரானவன், ஒடுக்கப்பட்ட சமூகத்தவன், மொத்தத்தில் முரசொலி வைத்திருந்தால் மனிதன் எனப் பொருள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக கொள்கைகளையும் சாதனைகளையும் பட்டியலிட்டு அடுக்கு மொழியில் ரஜினிகாந்த் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக முரசொலியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: யாரும் எதிர்த்துப் பேச அஞ்சிய பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ! - ரஜினி புகழாரம்

Intro:Body:முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள் - ரஜினிகாந்த் கருத்துக்கு முரசொலி பதில்.

முரசொலி வைத்திருந்தால் தமிழன், திராவிடன், மனிதன் என பொருள் என்று திமுக அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்ற ரஜினி பேசுகையில், முரசொலி வைத்திருந்தால் திமுககாரன், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என சொல்லிவிடலாம் என தெரிவித்தார். இந்த கருத்து திமுக இடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. சமூக வலைத்தளத்திலும் பேசும் பொருளாக மாறியது.

திமுக தரப்பில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதலில் ரஜினி கருத்துக்கு ஃபேஸ்புக் மூலம் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று திமுக அதிகாரபூர்வ நாளிதழ் முரசொலியில், "முரசொலி வைத்திருந்தால்" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் முரசொலி வைத்திருந்தால் தமிழன், திராவிடன், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்பவன், ஆண்டான் அடிமைக்கு எதிரானவன், ஒடுக்கப்பட்ட சமூகத்தவன், மொத்தத்தில் முரசொலி வைத்திருந்தால் மனிதன் என பொருள். திமுக கொள்கைகளையும், சாதனைகளையும் பட்டியல் இட்டு அடுக்கு மொழியில் முரசொலி ரஜினிகாந்த் கருத்துக்கு பதில் அளிக்கும்விதமாக செய்தி வெளியிட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.