ETV Bharat / state

தைரியம் நேருக்கு நேர் வாங்க.. ஆளுநரை அழைத்த திமுக.. முரசொலியில் விளாசல்! - MK Stalin latest news

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேராக அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும் என திமுகவின் முரசொலி பத்திரிகை கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்தியாவின் மன்னராக ஆளுநர் தன்னை நினைக்கிறார் - கடுமையாக விமர்சித்த முரசொலி

author img

By

Published : Jun 8, 2023, 11:33 AM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி - திமுக இடையிலான கருத்து மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில், திமுகவின் பத்திரிகையான முரசொலி நாளிதழ், இன்று (ஜூன் 8) ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டு உள்ளது.

இவ்வாறு வெளியான செய்தியில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தைரியம் இருந்தால், நேருக்கு நேராக அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும். அதைவிட்டு ஆளுநர் பதவிக்குள் பதுங்கிக் கொண்டு அரசியல் செய்ய முனையக் கூடாது. ஜாகையை கமலாலயத்திற்கு மாற்றிக் கொண்டு களத்துக்கு வரட்டும். அப்போது முழுமையாக வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை.

ஒரு நியமனப் பதவியில் உட்கார்ந்து கொண்டு, தினமும் அவர் செய்து கொண்டு வரும் குடைச்சல்கள் சகிக்க முடியாதவையாக இருக்கின்றன. அவர் ஏதோ இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரைப் போலவோ அல்லது இந்திய மன்னரைப் போலவோ மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதைப் பற்றி பேசி இருக்கிறார். ஆளுநர், துணைவேந்தர்களிடம் என்ன பேச வேண்டும், தொழிலதிபர்களிடம் என்ன பேச வேண்டும் என்ற அடிப்படை கூடவா தெரியவில்லை? ஆளுநர் பதவி என்பது மத்திய தலைமையால் தற்காலிகமாக கொண்டு வந்து வைக்கப்படும் குரோட்டன்ஸ் தொட்டி. தொட்டி தோப்பாகாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்றும் (ஜூன் 7) தமிழ்நாடு ஆளுநரை முரசொலி பத்திரிகை கடுமையாக விமர்சித்து இருந்தது. அதில், “ஆளுநருக்குத்தான் வேலை இல்லை என்றால், தங்களுக்கு தரப்பட்ட பணியைச் செய்து கொண்டிருக்கும் துணைவேந்தர்களை அழைத்து வைத்துக் கொண்டு ‘மேய்ற மாட்டை நக்கிடும் மாடு' வேலைகளை செய்து கொண்டிருக்கிறார், ஆளுநர்.

‘ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே’ என்னும் பழமொழிக்கு ஏற்ப தமிழ்நாட்டு அரசின் செலவில், மனிதர் (ஆளுநர்) சுக வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்து, அவர்களிடம் தனது அறிவாற்றலைக் காட்டுவதாக நினைத்து, தான் ஒரு 'Half boiled', அதாவது பாதி வெந்தவர் என்பதை ஆளுநர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

ஆளுநர் பல நேரங்களில், தான் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் 'ஆப்பசைத்த குரங்காய்' அகப்பட்டுக் கொள்கிறார். 'விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்குவது' என பழமொழி கூறுவார்களே, அது போன்று வேண்டாத விவகாரங்களில் தலையிட்டு 'சனியனை' விலை கொடுத்து வாங்குவதில் ஆளுநருக்கு பல நேரங்களில் ஒரு அற்ப சந்தோசம்.

சுய விளம்பரம் தேடி தேவையற்ற விவகாரங்களில் தலையிட்டு, பல நேரங்களில் வாலறுந்த நரியாக ஆன போதிலும், அவர் பாடம் பெறுவதில்லை” என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்டிருந்த அரசு முறைப் பயணத்தை, ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுகமாக விமர்சித்துப் பேசி இருந்தார்.

அதேநேரம், முதலமைச்சர் ஸ்டாலின், நேற்றைய முன்தினம் தொடங்கப்பட்ட நகர்ப்புற நல மையங்கள் தொடர்பான நிகழ்விலும், நேற்று நடைபெற்ற மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்விலும் ஆளுநரை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Governor Vs Mk stalin: உச்சத்தில் ஆளுநர் - திமுக மோதல்.. 'ஆப்பாயில் ஆளுநர்' என விமர்சித்த திமுகவின் முரசொலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.