ETV Bharat / state

'மெயின் ரோட்டில்' அராஜகம் - ஜெயக்குமார் மீது ஆர்.எஸ்.பாரதி சாடல் - ஜெயக்குமார் மீது திமுக எம்பி ஆர்எஸ்பாரதி சாடல்

திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் கைதான ஜெயக்குமார் தன்னை நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார்.

ஜெயக்குமார் மீது ஆர்.எஸ்.பாரதி சாடல்
ஜெயக்குமார் மீது ஆர்.எஸ்.பாரதி சாடல்
author img

By

Published : Mar 14, 2022, 6:10 PM IST

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவைச் சேர்ந்த தொண்டர் ஒருவரைத் தாக்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த பிப்.21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதன்பின் இரண்டு வழக்குகளில் ஜெயக்குமார் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மூன்று வழக்குகளிலும் ஜாமீன் பெற்று கடந்த மார்ச் 12ஆம் தேதி புழல் சிறையில் இருந்து வெளிவந்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், திமுக அரசு தன்னை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்தனர் என்று குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி இன்று (மார்ச் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு சினிமா போலீஸ் அதிகாரி போல அராஜகமாக ஜெயக்குமார் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் - பத்திரிகைப் பேட்டிகளில் அல்ல

தொடர்ந்து அவரது அறிக்கையில்,"ஜெயக்குமாரின் செயலை அனைத்து ஊடகங்களும் காட்சிப்படுத்திய பிறகும் அதிமுகவை எச்சரிப்பதற்காக என்னைக் கைது செய்திருக்கிறார்கள். என் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அவர் வழக்கம்போல் அபாண்டமாகப் புளுகியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் அர்த்தமற்ற அவதூறுகளைப் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான கருத்துகள் இருந்தால் அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து - காது கொடுத்துக்கேட்கும் ஒரு முதலமைச்சரைத் தமிழ்நாடு பெற்றிருப்பதை திரு. ஜெயக்குமாரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

நில அபகரிப்பு, பொது வெளியில் அராஜகம், கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட புகார்களுக்குத் திரு. ஜெயக்குமார் நீதிமன்றத்தில்தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமே தவிர, இப்படி பத்திரிகைப் பேட்டிகள் வாயிலாக அல்ல.

'சூப்பர் ஸ்போக்ஸ் பெர்சன்' ஜெயக்குமார்

சட்ட அமைச்சராக இருந்தவருக்குச் சட்டத்தின் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டு விட்டதே என்ற ஆதங்கம்தான் ஏற்படுகிறது. திரு. ஜெயக்குமார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் இல்லை. இணை ஒருங்கிணைப்பாளரும் இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர் கூட இல்லை. ஆகவே அவரை கைது செய்வது அதிமுகவை எச்சரிப்பதாக எப்படி அமையும்? 'மொட்டைத் தலைக்கும்- முழங்காலுக்கும் முடிச்சுப் போடும்' இந்த வியூகத்தை ஏன் அவர் முன் எடுக்கிறார்?

ஒருவேளை 'சூப்பர் ஸ்போக்ஸ்பெர்சனாக' இருந்த திரு. ஜெயக்குமாருக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவோ, இணை ஒருங்கிணைப்பாளராகவோ ஆக வேண்டும் என்ற ஆசை வந்திருக்குமேயானால் அதிமுகவிற்குள் கச்சேரி நடத்திக் கொள்ளட்டும்.

'தர்ம யுத்தம்' நடத்தி விட்டு இணைந்தவர்- இணைத்தவர்களிடம் 'தர்மம்' கேட்டுப் போராடட்டும். ஆனால் திமுக மீதும்- கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி திரு. மு.க.ஸ்டாலின் மீதும் புழுதி வாரி வீசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

திரு. ஜெயக்குமார் எத்தனையோ அவதூறு பேட்டிகளைக் கொடுத்தாலும், அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை. அதுவே எங்கள் கழகத் தலைவர் காட்டிய பெருந்தன்மை. ஆனால் முன்னாள் அமைச்சராக இருந்த திரு. ஜெயக்குமாரே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு 'மெயின் ரோட்டில்' அராஜகத்தில் ஈடுபடும்போது சட்டத்தின் ஆட்சிதான் அவரை கைது செய்ததே தவிர, திமுகவோ எங்கள் கழகத் தலைவரோ இல்லை என்பதை அவர் புரிந்துகொள்வது நல்லது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 2026இல் மீண்டும் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும்.. காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் ஜெயக்குமார் சூளுரை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.