கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் உள்ள முடித்திருத்தும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் சார்பிலும் அவ்வப்போது நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் முடித்திருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்லாவரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இ. கருணாநிதி ஏற்பாட்டின்பேரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு, காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினர்.
தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து தொழிலாளர்களும் நிவாரணப் பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க:தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய புதுமண தம்பதி!