தமிழ்நாட்டில் இதுவரை கரோனாவால் 30-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் ஆகியோர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 27) திமுக மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் (70), அவரது மனைவி ஆகியோர் கரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
அதில், இரண்டு பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!