சென்னை சண்முகம் சாலையில் தாம்பரம் நகர திமுக சார்பில் மொழிபோர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்பி தயாநிதி மாறன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "சமஸ்கிருதத்தைத் தெய்விக மொழியாகவும், காசு சம்பாதிக்கும் மொழியாகவும் மாற்றி விட்டனர். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் மொழிக்காகப் போராடியது போல் தற்போது மு.க. ஸ்டாலின் போராடி வருகிறார்.
பிரதமர் மோடி என்ன சொன்னாலும் பயமாக உள்ளது. மக்கள் தயக்கம் இல்லாமல் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்றால், முதலில் பிரதமர் மோடி போட வேண்டும் அல்லது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியாவது தடுப்பூசி போட வேண்டும். தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என மக்கள் நினைக்க தொடங்கிவிட்டனர். திமுகவிற்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது" இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி குறித்து தவறான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை:கிரண்பேடி எச்சரிக்கை