திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான மா.சுப்பிரமணியத்திற்கு கரோனா தொற்று கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி உறுதி செய்யப்பட்டு, வீட்டிலே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
இதனையடுத்து அவரது இளைய மகனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மாற்றுத்திறனாளி என்பதால் சென்னை கிண்டி கிங்க்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கடந்த 17 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அன்பழகன், இன்று (அக். 17) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 34.
இதையும் படிங்க...புதிதாகப் பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு