ETV Bharat / state

விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல்: ஸ்டாலின் பரப்புரை தேதி அறிவிப்பு!

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தலா ஐந்து நாட்கள் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

dmk leader stalin
author img

By

Published : Sep 25, 2019, 8:38 PM IST

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் ந.புகழேந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார். அதேபோன்று திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

திமுக ஆலோசனைக் கூட்டம்

விக்கரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் புகழேந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் பணி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். திமுக எம்எல்ஏ பொன்முடி தலைமையில் எம்.பி ஜெகத்ரட்சகன், கே.எஸ்.மஸ்தான், செல்வகணபதி, ஏ.கே.எஸ்.விஜயன், ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. அதேபோல் நாங்குநேரி தொகுதிக்கான தேர்தல் பணி பொறுப்புக்குழு எம்.எல்.ஏ ஐ.பெரியாசாமி தலைமையில், எம்.பி.கனிமொழி உட்பட பலரை நியமித்துள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணி பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன், எம்.பி.ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனிடையே, விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தலா ஐந்து நாட்கள் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் அக்டோபர் 3, 4, 17,18,19 ஆகிய தேதிகளிலும், நாங்குநேரியில், அக்டோபர் 5,6,12,13,1 4 ஆகிய தேதிகளில் அவர் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Intro:

Body:விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைதேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்று வருகின்றது.

திமுக எம்.எல்.ஏ பொன்முடி தலைமையில் எம்.பி ஜெகத்ரட்சகன், கே.எஸ்.மஸ்தான், செல்வகணபதி, ஏ.கே.எஸ்.விஜயன், ஆ கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

அதே போல் நாங்குநேரி தொகுதிக்கான தேர்தல் பணி பொறுப்புக்குழு எம்.எல்.ஏ ஐ.பெரியாசாமி தலைமையில், எம்.கனிமொழி உட்பட பலரை நியமித்துள்ளது திமுக தலைமை.

இந்நிலையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தேர்தல் பணி பொறுப்புக்குழு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி.ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.