திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாநில, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட திமுகவினருக்கும் வாக்காளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
அப்போது, தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்குதல், தேசிய கல்விக்கொள்கை வரையறையை திரும்பப் பெறுதல், நீர்நிலைகள் சந்திக்கும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளை தீர்த்தல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், ஆசியாவின் டெட்ராய்டாக உள்ள சென்னையில், புதிய பொருளாதாரக் கொள்கையால் தொழில் நிறுவனங்கள் நலிவடைந்ததற்கு இக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.