ETV Bharat / state

இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது- ஸ்டாலின்! - dmk party meet

சென்னை: காணொலி காட்சி மூலம் நடைபெற்ற திமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுகவினர் மீதான கைது நடவடிக்கைக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக கூட்டம்
திமுக கூட்டம்
author img

By

Published : May 24, 2020, 12:38 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் தொடக்கத்தில், அண்மையில் திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அந்தியூர் ப.செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

திமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இதனையடுத்து, நேற்று (23.5.2020) காலை கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால பிணை பெற்று கொடுத்த திமுக வழக்கறிஞர் அணிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:

  • அதிமுக அரசின் அநீதியைத் தட்டிக் கேட்கவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்படும் திமுக தொண்டர்களை அடக்குமுறையிலிருந்து அரவணைத்துப் பாதுகாக்கவும், அதிமுக அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாகப் பட்டியலிடவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும்.
  • திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீதும், சட்ட நெறிமுறைகளை தமது விருப்பத்திற்கேற்ப வளைத்து, பொய் வழக்குப் போட்டு கைது செய்யும் படலத்தைத் தொடங்கியிருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
    கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் ஸ்டாலின்

  • “கரோனா தோல்விகளையும்”,“கரோனா ஊழல்களையும்” திசை திருப்பி - கட்சியின் “ஒன்றிணைவோம் வா” என்ற எழுச்சி ஊட்டும் மக்கள் நிகழ்ச்சியைத் தடுத்திடும் வகையிலும் - களங்கப்படுத்திடும் முறையிலும் செயல்படும் அதிமுக அரசின் நிர்வாக அலங்கோலத்தை இனிமேலும் திராவிட முன்னேற்றக் கழகம் பொறுத்துக்கொள்ள முடியாது.

இதையும் படிங்க: ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.