சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் கனிமொழி, சசிதரூர், ராம்குமார் வர்மா உள்ளிட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு இன்று செர்பியா நாட்டிற்குச் செல்கிறது.
நாளை தொடங்கவுள்ள நாடாளுமன்ற யூனியன் கூட்டம், அக்டோபர் 18ஆம் தேதிவரை ஏழு நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.