மறைந்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி சென்னை - வாலாஜா சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
![DMK leader Stalin vowed to establish the rule of Anna in Tamil Nadu in three months](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20210203-wa0012_0302newsroom_1612334422_185.jpg)
பின்னர், அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இவருடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ. ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
![DMK leader Stalin vowed to establish the rule of Anna in Tamil Nadu in three months](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20210203-wa0013_0302newsroom_1612334422_544.jpg)
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "தந்தை பெரியாரின் தனயன் - முத்தமிழறிஞர் கலைஞரின், தாய்த்தமிழ்நாட்டின் அண்ணன் - பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள் இன்று!
அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?
மொழி - இனம் - நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட அண்ணாவின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம்! உறுதியேற்கிறோம் இன்று!" எனக் குறிப்பிட்டுள்ளார்.