ETV Bharat / state

அங்கன்வாடி மைய அலுவலகத்தை தொடங்கிவைத்த ஸ்டாலின் - dmk leader stalin own legislative

கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய அலுவலகக் கட்டடத்தை மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

dmk leader stalin opens anganwadi center in his own legislative

author img

By

Published : Dec 14, 2020, 1:53 PM IST

சென்னை: கொளத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் இன்று ஆய்வுமேற்கொண்டார். அப்போது தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய அலுவலக கட்டடத்தை திறந்துவைத்தார்.

மேலும், 70 லட்ச ரூபாய் செலவில் இறகுப் பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்லையும் நாட்டினார்.

அங்கன்வாடி மைய அலுவலகத்தை தொடங்கிவைத்த ஸ்டாலின்

தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அவர், சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் மூன்றாயிரத்து 500 பேருக்கு நிவாரண உதவிகளையும், அத்தியாவசிய பொருள்களையும் வழங்கினார்.

இதையும் படிங்க: ’திமுக பாதையே வன்முறை பாதைதான்’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.