ETV Bharat / state

அவை மரபுகளுக்கு உட்பட்டு செயல்பட்டவர் துரைக்கண்ணு- அமைச்சரை நினைவுகூறும் ஸ்டாலின்

author img

By

Published : Nov 1, 2020, 10:39 AM IST

சென்னை: வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Dmk leader stalin Condolence for minister duraikannu death

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வேளாண்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு மறைவெய்திய அதிர்ச்சிச் செய்தி கேட்டு பெருந் துயருற்றேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுகவில் மூன்று முறை பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று 2016ஆம் ஆண்டில் வேளாண்துறை அமைச்சராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைச்சரவையில் பதவியேற்றார்.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதும், துறை சார்ந்த மானியங்களில் பதிலுரையாற்றுகின்ற போதும், அவை மரபுகளுக்கு உட்பட்டுச் செயல்படும் அமைச்சர். அவரது மறைவு அதிமுகவிற்கும், சக அமைச்சரவை சகாக்களுக்கும் பேரிழப்பாகும்.

பொதுவாழ்வில் உள்ள அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். இப்போதும் அதையே வலியுறுத்தி, தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்ட பொதுவாழ்வில் உள்ள அனைவரும், அனைத்து அரசியல் கட்சியினரும், சுய பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர் துரைக்கண்ணுவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக அமைச்சர்களுக்கும், முதலமைச்சர் பழனிசாமி ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.