ETV Bharat / state

’ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார்’ - அமைச்சர் பாண்டியராஜன் காட்டம் - Chennai District News

சென்னை: பேரிடர் காலத்திலும் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜன்
அமைச்சர் பாண்டியராஜன்
author img

By

Published : Jun 25, 2020, 12:51 PM IST

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் முதல் ஐந்து நாள்களுக்குள் அருகில் உள்ள மருத்துவமனையில் சோதனை செய்துகொள்ள மக்கள் முன்வர வேண்டும்.

கரோனா தொற்றின் அறிகுறிகள் தென்பட்டு முதல் ஐந்து நாள்களுக்குள் சோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் 100% குணப்படுத்திவிடலாம். குறிப்பாக, கரோனாவின் அறிகுறிகள் ஏற்பட்டு கடைசி ஐந்து நாள்களில் வருவதால்தான் இறப்பு விகிதம் அதிகமாகிறது” என்றார்.

அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பு

மேலும் அவர் கூறுகையில், “வடசென்னையில் கமாண்டோ படைகள் பாதுகாப்பிற்காக மட்டுமே வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு அஞ்சி வெளியே சுற்றுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. கேரளாவில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்ததால்தான் கரோனா தொற்று குறைந்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டிலும் எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்

பேரிடர் காலத்திலும் தமிழ்நாடு அரசு குடிமராமத்து பணிகள் போன்ற வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருவதால், அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார். அப்படியல்லாமல், பேரிடர் காலத்தில் அரசுடன் இணைந்து ஸ்டாலினும் தோள் கொடுக்க வேண்டும். அதைத்தான் மக்களும் விரும்புவார்கள்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்றில்லாமல் தக்க ஆதாரத்துடன் பேசுங்க ஸ்டாலின்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.