தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் சங்கிலித் தொடராக உருமாறிவரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அதில், போலி இரட்டை இருப்பிடச் சான்றிதழ், வினாத்தாள்களில் தவறான மொழிபெயர்ப்பு, மாணவர்கள் ஆள்மாறாட்டம் என இந்திய இளைஞர்களின் கனவுகளை நீட் தேர்வு சிதைத்துக் கொண்டிருக்கிறது.
அனைத்து முறைகேடுகள் குறித்தும் உயர்மட்ட விசாரணை நடத்த இந்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். அனிதாவின் மரணத்தில் இழைக்கப்பட்ட அநீதி தொடங்கி, சமீபத்திய ஆள்மாறாட்ட முறைகேடு வரை, நீட் தேர்வு நம் மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
எனவே, நீட் தேர்வுக்குத் தடை விதிக்க அதிமுக அரசு உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.