ETV Bharat / state

அன்பழகன் படத்திறப்பு விழா: திமுக தலைமை அறிவிப்பு - anbalagan pic open function

சென்னை: மறைந்த பேராசிரியர் அன்பழகனின் படத்திறப்பு விழா வருகின்ற 14ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

Anbazhagan
Anbazhagan
author img

By

Published : Mar 10, 2020, 1:20 PM IST

திமுக பொதுச்செயலாளராக கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர் அன்பழகன், மார்ச் 7ஆம் தேதி காலமானார். அவரின் மறைவுக்கு கட்சி பாகுபாடின்றி பல்வேறு தரப்பினரும் தங்களின் இரங்கலை தெரிவித்து இருந்தனர்.

அவரது இல்லத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடல், வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

திமுக அறிவிப்பு
திமுக அறிவிப்பு

இந்நிலையில், வருகின்ற 14ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அன்பழகன் படத்திறப்பு விழா நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அன்பழகன் படத்தை திறந்து வைக்க இருக்கிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.