ETV Bharat / state

ஈரோடு கிழக்கில் திமுக போலியாக வெற்றி; எங்களுக்கு தோல்விகரமான வெற்றி - ஜெயக்குமார் - திமுக போலி வெற்றி ஜெயக்குமார் விமர்சனம்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பெற்றிருப்பது போலியான வெற்றி என, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

திமுக போலி வெற்றி - ஜெயக்குமார்
திமுக போலி வெற்றி - ஜெயக்குமார்
author img

By

Published : Mar 3, 2023, 6:36 PM IST

சென்னை: கோடம்பாக்கத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விருகை ரவியின் மகள் திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவை பொறுத்தவரை நாங்கள் ஒன்றிணைந்து தான் செயல்படுகிறோம். ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றுமையாகவே உள்ளோம். காமாலைக்காரர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல, அவர்களுக்கு தெரிகிறது. எங்களின் கட்சி வேகமாக உள்ளது. எழுச்சியாக உள்ளது. வரும் காலங்களில் வீறுகொண்டு மகத்தான வெற்றியைப் பெறும் நிலையில் தான் அதிமுக உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் திமுக அரசுக்கு மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்திவிட்டது. இதற்கு முன்பு, அவர்கள் எந்த தேர்தலிலும் இதைப்போல் பயந்தது கிடையாது. இதுவரை ரூ.350 கோடியை செலவு செய்து போலியான வெற்றியை பெற்றிருக்கிறார்கள். திமுகவினர் எந்த அளவிற்கு பயந்து இருக்கிறார்கள் என்பது அவர்களது மனசாட்சிக்கே தெரியும். அதனால் தான் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள். 22 மாதங்களில் திமுக அரசு கொள்ளையடித்த பணத்தை ஈரோடு கிழக்குத் தொகுதியில் செலவு செய்தனர். ஆளும் அரசின் பணம் பாதளம் வரை பாய்ந்துள்ளது.

அதிகார துஷ்பிரயோகம், ஜனநாயகத்தை கேள்வி குறியாக்குவது, வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைப்பது, ரூ.5,000 மதிப்புள்ள மளிகைப் பொருட்களுக்கு கூப்பன் வழங்குவது என இவ்வளவும் செய்து மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இது வெற்றியே கிடையாது. ஆனால் இதையும் தாண்டி 45,000 பேர் வாக்களித்துள்ளனர். இது ஸ்டாலினை பொறுத்தவரையில் மிகப்பெரிய ஏமாற்றம். திமுக வெற்றி பெற்றது எங்களைப் பொறுத்தவரை தொழில்கரமான வெற்றி தான். உண்மையான வெற்றி அதிமுகவுக்கு தான். உண்மையிலேயே ஜனநாயகம் கேலிக்கூத்தாகி இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை இது தோல்விகரமான வெற்றிதான்.

அதிமுகவைப் பொறுத்தவரை பிரிந்திருக்கும் இரண்டு அணிகளும் சேர்ந்து செயல்பட வேண்டும் என, அண்ணாமலை கூறவில்லை. நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளுங்கட்சி முழுமையான அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது. வாக்கு இயந்திரங்கள் முடக்கப்பட்டன. ஒரு போலியான வெற்றி எந்த ஒரு தாக்கத்தையும் பாராளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப் போவதில்லை.

திமுக எவ்வளவு பணத்தை வாரி இறைத்தாலும் உண்மையிலேயே நியாயம், தர்மம், ஜனநாயக அடிப்படையில் மகத்தான வெற்றியை நாங்கள் பெற்றிருக்கிறோம். அதிமுகவுக்கு ஜனநாயகத்தின் மீது தான் நம்பிக்கையே தவிர, பண நாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. மக்களை அடைத்து வைக்கும் கட்சி, திமுக தான். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். சசிகலா எங்களை விட்டுவிட்டு, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சியை செய்யட்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி பலமாக உள்ளது - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.