உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், விருப்ப மனுவை திமுக மாவட்ட அலுவலகத்திலிருந்து பெற்று, நவம்பர் 14ஆம் தேதி முதல் நவம்பர் 20ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் தெரிவித்திருந்தார். அதன்படி, திமுக நிர்வாகிகள் பலர் விருப்பமனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் விருப்பமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "பல்வேறு மாவட்ட கழகச் செயலாளர்கள் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்திட வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்திட அனுமதிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது