சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அவசர செயற்குழு கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், செயற்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், நகர்புறங்களில் கூட்டணி கட்சிகளுக்கு இடஒதுக்கீடு, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் அறிவிக்கப்படவுள்ள உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்வது பற்றியும், வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. தலைமை செயற்குழு அவசர கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 550 பேர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்