ETV Bharat / state

"எட்டு வழிச்சாலை திட்டத்தில் திமுக இரட்டை வேடம்" - ஓபிஎஸ் கண்டனம்! - ஓபிஎஸ் கண்டனம்

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

DMK
DMK
author img

By

Published : Jan 5, 2023, 7:03 PM IST

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த துடிக்கும் தி.மு.க. அரசு, கோவையில் தொழிற்பூங்கா என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை பறிக்க திட்டமிட்டுள்ள தி.மு.க. அரசு, தற்போது சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாக செய்தி வந்துள்ளது. இது தி.மு.க. அரசின் இரட்டை வேடத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அரசு மருத்துவர்களுக்கான காலமுறை ஊதிய உயர்வு ஆணையை செயல்படுத்துவதாக கூறிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு அதுபற்றி வாய் திறக்காமல் இருக்கிறார். அதுகுறித்து போராட்டம் நடத்தினால் அவர்கள்மீது பழிவாங்கும் நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, முந்தைய தி.மு.க. அரசினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ஊதிய முரண்பாட்டினை நீக்குவேன் என்று கூறி, அதனை தேர்தல் வாக்குறுதியிலும் சேர்த்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு அதை நிறைவேற்ற மறுக்கிறார். இதுபோன்ற தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டிற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

தற்போது சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்திலும் இரட்டை நிலைப்பாட்டினை தி.மு.க. அரசு எடுத்திருக்கிறது. டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர், சாலை போடும் திட்டங்களுக்கு தாங்கள் எதிர்ப்பாக இருந்ததில்லை என்று கூறினார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்.

எட்டு வழிச்சாலை குறித்து 11-6-2018 அன்று சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் பேசிய ஐ.பெரியசாமி , சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை மிக அவசியமாக இந்த மக்களுக்கு சோறு போடப் போகிறதா? என்று வினவினார். மேலும் அவர் பேசுகையில், சேலத்திற்கு அருகில் இருக்கக்கூடிய கல்வராயன் மலையாக இருந்தாலும் சரி அல்லது அதற்கு அருகில் இருக்கக்கூடிய கஞ்சமலையாக இருந்தாலும் சரி, இந்தப் பகுதிகளில் எல்லாம் iron ore இருப்பதாகவும், Jindal போன்ற தனியார் நிறுவனங்கள் எதிர்காலத்திலே நம்முடைய தாது வளங்களையெல்லாம் சுரண்டி, ஏற்றுமதி செய்வதற்கு துறைமுகத்தை இணைப்பதற்காகத்தான் இந்தச் சாலையை அமைப்பதற்கான முக்கியத்துவத்தை இந்த அரசு கொடுப்பதாக பேசப்படுகிறது என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கமிஷன் வாங்குவதற்காக மக்களைப் பற்றி கவலைப்படாமல், விவசாயத்தைப் பற்றி கவலைப்படாமல் 10,000 கோடி ரூபாய் திட்டத்தைக் கொண்டு வர அரசு முனைப்பாக இருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க.விற்கு வாக்களித்தால் சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் நிறுத்தப்படும் என்று கூறியவர்தான் தி.மு.க. தலைவர். மேலும், இந்தத் திட்டத்தின்மூலம் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள், காப்புக் காடுகள், மலைகள், பாதிப்படையும் என்றும் கூறினார். உண்மை நிலை இவ்வாறிருக்கையில், தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் தற்போதைய பேட்டி, தி.மு.க.விற்கு வர வேண்டியது வந்து விட்டதோ? என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.

தி.மு.க.வின் இந்த இரட்டை நிலைப்பாட்டிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எதிர்த்த மு.க. ஸ்டாலின், தற்போது தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது குறித்து வாய் திறக்காமல் இருப்பது, மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. இந்தத் திட்டம் குறித்த தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினை முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சிறுவன் காணாமல் போன சம்பவத்தில் பலே டிவிஸ்ட்.. 36 மணி நேர பக் பக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.