சட்டப்பேரவை தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுவாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் என்றால் 60 முதல் 100 பேர் வரை பங்கேற்பார்கள்.
ஆனால் தற்போது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நகர, பகுதி செயலாளர்கள் என அனைத்து வகை உறுப்பினர்கள் என மொத்தம் 2,000 பேருக்கு மேல் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா காலம் என்பதால் பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவதும் பின்பற்றப்படும் என்றும் அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் ஸ்டாலின் 'தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் காணொலி மூலம் பரப்புரை செய்துவருகின்றார். திமுக தலைவர் ஸ்டாலின் தை மாதத்தில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்குவார் என்ற நிலையில், மாவட்ட செயலாளர் கூட்டத்திற்குப் பிறகு ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை குறித்த அட்டவணை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் தமிழ்நாடு முழுவதும் எந்த வகையான தேர்தல் பரப்புரை யூகங்கள் அமைக்கலாம், கள நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி