ETV Bharat / state

ஸ்டாலினின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுவோம் - க.பொன்முடி! - திமுக

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைப்பதை செய்து காட்டுபவர்களாக இருப்போம் என்று அக்கட்சியில் புதிதாக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றுள்ள பொன்முடி தெரிவித்துள்ளார்.

bearers
bearers
author img

By

Published : Sep 11, 2020, 7:14 AM IST

திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று(செப்.9) நடைபெற்றது. அதில் கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, பொதுச் செயலாளர் பொறுப்புக்குத் தேர்வான துரைமுருகன், பொருளாளர் பொறுப்புக்கு தேர்வான டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்ட க.பொன்முடி, ஆ.ராசா, ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதையடுத்து, துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி மற்றும் ராசா ஆகியோர் அவரவருக்கான அறைகளில் அமர்ந்து தங்கள் பணிகளை தொடங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, ” துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்து கட்சியின் கொள்கைகளை பரப்ப மு.க.ஸ்டாலின் வாய்ப்பளித்திருக்கிறார். அவரது எண்ணத்திற்கு ஏற்ப, அவர் நினைப்பதை செய்து காட்டுபவர்களாக இருப்போம்.

'ஸ்டாலினின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுவோம்'

தேர்தலுக்கு என்று பணியாற்ற வேண்டியதில்லை. இயக்கத்திற்கு என்று என்றும் பணியாற்றி வருகிறோம். தேர்தலுக்காக அனைவரையும் அரவணைத்து சிறப்பாக பணியாற்றுவோம் “ என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்ற பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் கோபாலாபுரம் கலைஞர் இல்லத்திற்கும் சென்று அவர்கள் மரியாதை செய்தனர்.

இதையும் படிங்க: தேர்தலில் இளைஞரணிக்கு அதிக இடம் - உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.